Wednesday, July 13, 2011

மந்திரம்- 1

அன்பே சிவம்...
 

                                    
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை அடக்கவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால் பிற்காலத்தில் மனிதன் தனது சுய லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும். அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும், அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது என்றே சொல்லலாம்.

மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும் அவற்றின் சக்தியுமேயாகும். இந்த மந்திரங்களை பயன் படுத்தும் கருவியாக யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த வழிமுறைகள் தொன்று தொட்டு நமது தேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திர சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. இதனை தவறான வழியில் பயன் படுத்தாமலும், தீய செயல்களிற்கு பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு கற்றுத் தருவதில்லை.
மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக் கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம சப்தம்” என வழங்குவர்.
பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது. மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை.

பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவே இந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும். 

No comments:

Post a Comment