இன்று வானில் ஏராளமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவருகின்றன.இவை அனைத்தும் பூமியை ஒவ்வொரு
விநாடியும் கண்காணித்து வருகின்றன.அமெரிக்கசெயற்கைக்
கோள்கள் சீனா,இந்தியாவின் முழு நிலப்பரப்பையும்
ஒவ்வொரு விநாடியும் படம் பிடித்துவருகின்றன.அதே
போலத்தான் சீனாவும்,இந்தியாவும்.வானியலில்
வெள்ளைக்காரர்கள்(அமெரிக்க ஐரோப்பாவினர்)தான்
முன்னோடிகள் என்று நீங்கள் நினைத்திருந்தால்
அதை மறந்துவிடுங்கள்.
அவர்கள் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும்
நமது நாட்டிலிருந்து களவாடப்பட்டவை.ஆனால்
வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற
அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக
ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.
அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர்
குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த
வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார்.
அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை
ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித்திருப்பினார்.
கி.பி.1965 ஆம்ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.
இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன
என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய
தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு
Census of Exact Science எனப் பெயரிட்டார்.
No comments:
Post a Comment