Friday, July 15, 2011

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!


து இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை
நினைவூட்டியது
-பால் ப்ரண்டன்

இங்கிலாந்தில் ஒரு பாதிரியார் ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டு சர்ச்சால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் ஹிப்னாடிசமும், சில சித்து வித்தைகளும் தெரிந்த அந்தப் பாதிரியார் தனியாக இயங்க ஆரம்பித்தார். அவர் சக்திகளைக் கண்ட சிலர் அவரைப் பற்றி அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் தன் சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பணம் பறிக்கவும், தரக்குறைவாக நடந்து கொள்ளவும் செய்தார். இதை பால் ப்ரண்டன் போன்ற பலரும் அறிந்திருந்தாலும் அவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஒரு முறை பால் ப்ரண்டன் அவருக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண்மணி ஒரு இரவில் தூக்கத்தில் நடப்பது போல் தெருவில் நடந்து வரக்கண்டார். அவரை நிறுத்தி விசாரித்த போது அந்தப் பாதிரியார் வரச்சொன்னதாகவும், அவரை சந்திக்கச் செல்வதாகவும் சொன்னார். அந்தப் பெண்மணி பேசிய போது அவர் சுயநினைவில் இல்லை ஏதோ வசியத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது பால் ப்ரண்டனுக்குப் புரிந்தது. அந்த இரவு வேளையில் அந்த நபரிடம் செல்வது நல்லதல்ல என்று பால் ப்ரண்டன் சொல்லியும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் வந்த வேறொரு நண்பரின் உதவியுடன் அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டார்.

மறுநாள் 
இந்திய யோகிகளைப் பற்றிச் சொல்லி தன்னை இந்தியாவுக்கு அனுப்பிய இந்திய நண்பரைக் கண்டு வருத்தத்துடன் இந்தத் தகவலைச் சொன்னார்.அவரே ஒரு யோகி என்பதைப் பின்னாளில் பால் ப்ரண்டன் உணர்ந்திருந்தார். பால் ப்ரண்டன் சொன்ன தகவல் அந்த இந்திய யோகியை ஆத்திரப்பட வைத்தது. இது போன்ற ஆசாமிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று சொன்ன அவர் உடனடியாக ஏதோ மந்திரங்கள் சொல்லி அந்த போலி பாதிரியாரை சபித்தார். இந்தியா வந்து யோகிகளின் சக்திகளைக் கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் இது அந்தப் பாதிரிக்கு அபாயமே என்றுணர்ந்தார். பெரியதாக ஒன்றும் செய்யாமல் அந்த பாதிரியாருக்கு புத்திமதி கூறி மிரட்டி ஊரை விட்டே போகும்படி செய்து திருந்த சந்தர்ப்பம் தரலாமே என்று சொன்னார். நீங்கள் உங்கள் வழிப்படி முயற்சி செய்யுங்கள் நான் வழிப்படி முயற்சி செய்திருக்கிறேன் என்று அந்த இந்திய யோகி கூறினார்.

இந்திய யோகிகளின் சக்தியைக் கண்கூடாக இந்தியா வந்திருந்த போது கண்டிருந்த பால் ப்ரண்டன் அந்தப் போலிப் பாதிரியாருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து விரைவாக அந்தப் பாதிரியாரை சந்தித்து புத்தி சொல்லி எச்சரிக்கச் சென்றார். அந்தப் பாதிரியார் தங்கியிருந்த இடத்திற்குப் போன போது உள்ளே இருட்டாக இருந்தது. அந்த இடமே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு விசாரித்த போது அந்தப் பாதிரியார் தன் சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த போது மின்விளக்குகள் திடீரென்று படாரென்று வெடித்தன என்றும் ஏதோ ஒருசக்தி அந்தப் பாதிரியாரை ஆக்கிரமித்தது போல் இருந்தது என்றும் பயத்தில் அந்தப் பாதிரியார் ஏதேதோ பிதற்றிக் கொண்டு ஏதோ சைத்தான் வந்து விட்டதாகவும், இதெல்லாம் சைத்தானின் வேலை என்றும் கத்திக் கொண்டு கீழே மயங்கி விழுந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பின் அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு விரைவாக அவருடைய சீடர்கள் அழைத்துச் சென்றார்கள்.

பால் ப்ரண்டனுக்கு இது அந்த இந்திய யோகியின் சாபம் செய்த வேலையே என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. அந்த சீடர்களிடம் இது நடந்த நேரத்தைக் கேட்டார். அவர்கள் சொன்ன நேரம் அந்த இந்திய யோகி மந்திரங்களை உச்சரித்து சபித்த அதே நேரம்!. அந்த முட்டாள் சீடர்களில் ஒருவனிடம் அவர்களது குருவின் மயக்கம் தெளிந்தவுடன் தரச் சொல்லி பால் ப்ரண்டன் ஒரு கடிதத்தைத் தந்தார். உடனடியாக அந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றும் இல்லா விட்டால் போலீசில் புகாரும் தரப்படும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்தப் பாதிரியார் பின் அந்த ஊரை விட்டே போய் ஒரு வருடத்திற்குள் ஒரு கிராமத்தில் இறந்து போனார்.

No comments:

Post a Comment