தினமும் ஒரு மணி நேரம் வீதம் சுமார் ஓராண்டுக்கு ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும் என உறுதிபூணுவோம்.ஆனாலும்,அதில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் வரத்தான் செய்யும்.
உதாரணமாக,வீட்டிலிருக்கும் வயதானவர்களின் மரணம்,உறவினர்களின் வீடுகளில் குழந்தைபிறப்பு,உறவினர்வீடுகளில் சிறுமிகள் பருவமடைதல் போன்ற அசுப / சுப காரியங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.இதனால்,ஐந்து நாட்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க இயலாமல் போய்விடும்.
ஓம்சிவசிவஓம்
ஆறாம் நாள் மீண்டும் வைராக்கியமாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தைத் தொடங்கிட வேண்டும்.
சிவபெருமான் நமது மன உறுதியை முதலில் சோதிப்பார்.ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தைப் பொறுத்த வரையில் அதை தொடர்ந்து ஜபிக்க முடியாமல் மட்டுமே போகலாம்;எவ்வளவு நாளாக ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை;இன்றிலிருந்து மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்குங்கள்.
ஆறு மாதங்களில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருந்தால் நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டிவிட வேண்டும்.அதன் பிறகு,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி எதுவும் நம்மைப் பாதிக்காது.
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம் மந்திரம் எப்படி செயல்படுகிறது?
நமது தினசரி மந்திர ஜபமானது நம்மைச் சுற்றியிருக்கும் நமது சூட்சும உடல்களில் முதலில் நிரம்புகிறது.இந்த நிலையை எட்டவே ஏழு முதல் பத்துநாட்கள் ஆகின்றன.அதன்பிறகு,நமது தலைக்கு மேலே இருக்கும் வான்பகுதிக்குப் பரவுகிறது.(நமது செல்போன் ஆன் பண்ணியிருந்தால்,எப்படி அதன் நெட்வொர்க் நம்மைப் பின் தொடருமோ அப்படி)
நாம் பத்தாயிரம் தடவைக்கும் மேலாக ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபித்துவிட்டால்,(இதில் தொடர்ந்து மூன்றுநாட்களுக்கு மேல் இடைவெளி இல்லாமலிருக்க வேண்டும்.மூன்று நாட்களுக்கு மேலாக இடைவெளி இருந்தால் மந்திர ஜபம் செயல்பட மிகவும் தாமதமாகும்)
நமது தலைக்கு மேலே இருக்கும் மந்திர அலைகள் இருக்கும் வான்பகுதியை அதுத் தொடத் துவங்கும்.
அப்போது நமது சிறுசிறு தேவைகளை நிறைவேற்றத்துவங்கும்.நமது எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததும் நமது மந்திர ஜபம் நம்மை சூட்சுமக் கவசமாகக் காக்கத் துவங்கும்.உதாரணமாக,ஒருவர் 1,27,524 தடவை ஓம்சிவசிவஓம் ஆறு மாதங்களில் விடாமல் ஜபித்துவருகிறார் எனில்,ஏழாம் மாதத்தில் அவருக்கு ஏற்படவிருக்கும் விபத்து அல்லது அவமானம் அல்லது கர்மவினையின் செயல்பாடு 90 சதவீதம் குறைந்துபோயிருக்கும். மீதி 10 சதவீதம் விதிப்படி செயல்படும்.
ஓம்சிவசிவஓம் மந்திரமும் சரி,வேறு எந்த இஸ்லாம்,கிறிஸ்தவ,புத்த,ஜைன மந்திரங்களும் இதுபோலத்தான் செயல்படும்.
இதுபற்றி மேல்நாடுகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.எனது சிற்றறிவுக்கு எட்டியதை நான் விவரித்திருக்கிறேன்.
தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய ஓம்சிவசிவஓம் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் அவர்கள் வசித்துவருகின்றனர்.சிறு சிறு அதிசயங்கள் நிகழ்ந்ததன்மூலமாக அவர்களுக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் குலதெய்வத்திற்குச் சமமாகிவிட்டது.
இந்நிலையில் அவர்களின் குடும்ப உறவினர் ஒருவர் கடன் தொல்லை தாளாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.விளைவு?கடைசி நொடியில் அவரது தற்கொலைமுயற்சி கண்டறிந்து,தடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைக் கேள்விப்பட்ட இந்த ஓம்சிவசிவஓம் தம்பதியினர் தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர்.
மருத்துவர்கள் இந்த தம்பதியை மட்டுமல்ல;யாரையுமே அறைக்குள் அனுமதிக்கவில்லை;
எல்லோரும் வெளியே நில்லுங்க;இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என நர்ஸ்கள் கத்தினர்.
நெருக்கடியான நேரத்தில் ஓம்சிவசிவஓம் மந்திரம் உடனடியாக உதவும் என்ற வரி அந்த ஓம்சிவசிவஓம் தம்பதிக்கு நினைவுக்கு வந்தது.
உடனே விரிப்பு,ருத்ராட்சம் எதுவும் இல்லாமலேயே அந்த நெருக்கடியான சூழ்நிலையில் தனது உறவினர் உயிர் பிழைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்தனர்.சுமார் நான்கரை மணிநேரம் கடந்தது.
அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளிவந்த மருத்துவர்கள்,
“ எல்லாம் கடவுள் அதிசயமே! பிழைச்சிட்டார் போய்ப் பாருங்க” என்று இந்த தம்பதியிடம் வந்து சொன்னார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.உரிய தம்பதியரின் அனுமதியோடு இந்த சம்பவம் வெளியிடப்படுகிறது.ஓம்சிவசிவஓம் உயிரைக் காக்கும்!!!
No comments:
Post a Comment