Wednesday, July 6, 2011

சிரிப்பு வெடி வெடிகள்

நபர் - 1:ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர்- 2: அய்யய்யோ...அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர்- 1:அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
----------------------------------------------------------------------------------------------------
ஒருவன் காது ஸ்பெஷலிஸ்ட் இடம் சென்றான்.
டாக்டர் ! எனக்கு எதைக்கேட்டாலும் பாதி தான் விழுகிறது என்றான்.
அப்படியா .. முதல் பாதியா ..2 ம் பாதியா ..எனக்கேட்டார் டாக்டர்.
சரியாகத் தெரியவில்லை டாக்டர் .. ஆனால் பாதி தான் கேட்கிறது என்றான்.
சமயோஜிதமாக டாக்டர் சொன்னார்;
"இப்ப நான் சொல்வதில் என்ன பாதி விழுகிறது என்று சொல் ."
" பீஸ் 300 ரூபாய்."
அவன் பதில் சொன்னான்.
"பீஸ் 150 ரூபாய். "

------------------------------------------------------------------------------------------------------- 
அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?
பிள்ளை : நீதானம்மா டீச்சருக்கு பயப்படாதன்னு சொன்ன..
அம்மா : நான் எப்படா சொன்னேன்.
பிள்ளை : கடவுளத் தவிர வேற யாருக்கும் பயப்படாதன்னு சொன்னியே
அம்மா :?!?!?!

No comments:

Post a Comment