Saturday, July 16, 2011

அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு


அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு

இந்த பூமியில் உள்ள அனைத்து மனித குல முன்னேற்றங்களும் நமது இந்து தர்மத்திலிருந்தே பிறந்தன என்பதற்கு பல்லாயிரம் ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஓலைச்சுவடிகளாகப்பதிவு செய்யப்பட்டு இருந்தன.அவற்றை நாம் சுதந்திரம் வாங்கும் முன்பே இங்கிலாந்து நாட்டினர் ஒரு கப்பல் முழுக்க
இன்றைய தஞ்சை சரபோஜி நூலகத்திலிருந்து கொண்டு போய்விட்டனர். இங்கிலாந்தும் ஜெர்மனியும் இவற்றை இன்று வரை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.
குந்தம் குன்னாச்சாரி என்பவர் பிரம்மாஸ்திரம் பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்தில் 1920கள் வாக்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த புத்தகமே இன்றைய அணுகுண்டு கண்டுபிடிக்கக்காரணமாகி விட்டது.ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறால்,அணுகுண்டு இவ்வளவு கோரவடிவம் எடுத்துவிட்டது.
அக்கால பிரம்மாஸ்திரம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அவரை மட்டும் சாம்பலாக்கும்.அருகில் உள்ள மனிதன், தாவரங்கள்,பொருட்களை எதுவும் எந்த பாதிப்பும் செய்யாது.
இக்கால அணுகுண்டு ஏவப்பட்டது வானில் ஒரு கோடி சூரியன் அளவு பிரகாசம் தரும்.பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இதைப் பார்ப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்.மேலும் விபரமறிய மகாபாரதம் படியுங்கள்.அல்லது ராமாயணம் படியுங்கள்.ராவணன் மகன் இந்திரஜித் ஆஞ்சனேயர் மீது பிரம்மாஸ்திரம் ஏவுவான்.அப்போது என்ன நடக்கும் என்பதை விரிவான இராமாயணம் படித்துப்பார்க்கவும்.அணுகுண்டின் சக்தியை அறிய இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் எழுச்சி என்ற பாகத்தில் வந்துள்ள புத்தகங்களைப்படித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment