Friday, April 6, 2012

தினம் ஒரு திருமந்திரம் (06-04)



பன்னிரண் டானைக்குப் பகல்இரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இரவு இல்லையே.



பொருள் : பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல் என்று இரவு என்றும் காலங்கள் உள்ளன. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாய்வதால் சிரசிலுள்ள ஆன்மா அறியவில்லை. கீழ்முகம் செல்லாது மேல்முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தபின், பிராணனாகிய சூரியனுக்குப் பகல் இரவு என்ற காலங்கள் இன்றி எப்போதும் பிரகாசிக்கும். (பாகன் - ஆன்மா).

No comments:

Post a Comment