Friday, March 16, 2012

இந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளே


 

                 இந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளே ஆரேக்கியம் மனிதனின் உடல் சமநிலையை பேணும் அதுவே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும். ‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ அதுவே கிரியை வழிபாட்டின் அடிப்படையும் யோக நெறியின் ஆரம்பப்படியும் கிரியை பிண்டத்தில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை செய்முறையில் காட்டுவது.
ஆலயத்துக்கு செல்லும் போது முதலில் உடலை சுத்தம் செய்யது தோய்ந்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து சுத்தமாகச் செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின்னர் ஆலயத்தினுள் நுளையுமுன் கோபுரதரிசனம் செய்ய வேண்டும். ‘கோபுரதரிசனம் கோடி புண்ணியம்’என்போர் பெரியோர் அப்போது மேல்நாடிப்பாக்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. உடலுக்கு தலைதான் பிரதானம் மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து மூன்றுமுறை சுற்றுகின்ற போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.
பின்னர் புத்தி தரிசனமான விநாயகர் வழிபாடு அங்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழமை இதை இப்போது அமேரிக்காவில் ‘ Brain yoga’ என குறிப்பிட்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். எம்முள் உள்ள புத்தியை வினாயகராக வடிவமை த்துள்ளனர் எமது முன்னோரான முதல் சித்தன் அகஸ்தியர். அவர் யானையின் முகத்தை அமைத்ததன் காரணம் புத்தியுள்ளவன் கேட்க வேண்டும். அதற்கு பெரியகாது வேண்டும். அவன் பேசக்கூடாது கூர்மையானதும் உன்னிப்பானதுமான கண்கள் வேண்டும். அமைதியான சுபாவம் வேண்டும். அதாவது சாத்வீக குணம் இவையனைத்தும் பொருந்திய உருவம் யானை. அவருக்கு நான்கு கை அதில் ஒன்று அறுந்த பாசம் கையிறு அது மும்மலங்களின் விடுதலையை எமக்குணர்த்துகின்றது. அடுத்து அங்குசம் இது யானையை யானைப்பாகன் கட்டுப்படுத்தி சரியான வளியில் செல்ல பயன்படுத்தும் கருவி எமக்குள்ளுள்ள மதம் என்னும் யானையை கட்டுப்படுத்துவதன் மூலமே புத்தியை சரியான வழியில் பயன்படுத்த முடியும் என்பதை அது உணர்த்துகின்றது. அடுத்த கை உலகத்தை அடையாளப்பாடுத்தும் மோதகம் இது உலக அறிவு இதில் ஞானமும் அஞ்ஞானமும் கலந்துள்ளது. அதனைப் பிரித்தறிய ஞானமான அறிவு வேண்டும் அதுவே அடுத்த கையில் உள்ள எழுத்தாணி எனவே உருவமில்லாத புத்திக்கு உருவம் கொடுத்து உணர்த்துவதன் மூலம் தனக்குள்ளுள்ள புத்தியின் வடிவத்தை உலகு மக்களை உணர்த்தினர் ஆதிமகரிசி அகத்தியர் இதை உணர்ந்து தனக்குள் வழிபடுவதன் முலம் மன அமைதியுடன் ஆரோக்கியமும் பெறுவர்.
அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது சிலர் சாதாரனமாக நடப்பர் சிலர் அடியளிப்பர். நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் காவடி எடுப்பர். இது ஓர் அக்குப்பஞ்ச வைத்திய முறையை ஒத்தகாக அமையும். அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
எனவே இந்து மதத்தில் பயன்படுத்தும் வழிபாட்டு முறைகள் அனைத்துமே அர்த்தமுள்ளவை அவை அனைத்தையும் எமக்களித்தவர்கள் மகரிசிகளும் சித்தர்களும் ஞானியர்களுமே அவர்கள் உடலும் உள்ளமும் எப்போதும் அமைதியாக இருக்கும் போதுதான் தன்நிலை அறியமுடியும். இதையே ஞானம் என்பர். தன்னை அறிந்துணர்ந்தவன் ஞானி உலகை அறிந்தவன் அறிவாளி அறிவை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அதை தன்னுள் ஆக்கிக்கொன்டால்தான் அதன் பயனறிய முடியும். ‘ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது’ என்போர் சான்றோர். சைவ சித்தாந்தம் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு படிகள் பற்றிக் கூறுகின்றது. இதில் கிரியை ஆலயங்களில் நடைபெறுகின்ற வழிபாட்டு முறைகளைக் கூறுகின்றது.

No comments:

Post a Comment