Friday, March 16, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 16/03/2012


                      சூரியன் நல்லன் குதிரை இரண்டுள
                      வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்குஇல்லை
                      கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
                      வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

பொருள் : மனமாகிய ஆரியன் மிகவும் நல்லவன். அவன் ஓட்டுகின்ற பிராணன், அபானன் ஆகிய குதிரைகள் இரண்டு உள்ளன. அவற்றை வெளியே விட்டு உள்ளே நிறுத்தும் திறமையை அறிபவர் இல்லை. பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமையும். (குதிரை இரண்டு - இடைகலை, பிங்கலை, ஆரியன் - பெருமை மிக்க மனம்.)

No comments:

Post a Comment